Friday 21 December 2018

ஜீவகாருண்யம்

🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲

சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ 
காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் -
அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் 
செய்வித்தும் - ஆடல், பாடல், வரிசை, 
ஊர்வலம் முதலிய விநோதங்களை அப்ப வர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில் 
அழுந்தியிருக்குந் தருணத்தில் -

 பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும், தமது மக்கள், துணைவர் முதலியோர்க்காயினும், ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது. 
அப்போது, அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகின்றார்கள். 

இப்படி துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும், -ஆடல் ,பாடல் 
வாத்தியம் , வரிசை ஊர்கோலம் முதலிய 
வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரா
அன்னம் முதலிய பெருமைப்பாடுகளும் 
அந்த  ஆபத்தை தடை செய்யக்கண்ட 
தில்லை. 

அந்த சுப காரியத்தில் உள்ள
படியே பசித்த ஜீவர்களுக்கு ஆகாரங் 
கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் 
அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்க 
த்தையும்,கடவுளின்பத்தையும் வெளிப்பட செய்திருந்தார்களானால் 

அந்த விளக்கமும் இன்பமும் அத் தருணத்தில் நேரிட்ட  ஆபத்தை நீக்கி, விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக  உண்டு பண்ணும் 
அல்லவா?,ஆதலின் விவாக முதலிய 
விசேஷச் செய்கைகளிலும் தங்கள்தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென்று அறிய வேண்டும்.   🌹 வள்ளலார் 🌹 

🍒இனிய காலை வணக்கம். 🍒

Thursday 20 December 2018

Today Pasi Atruvithal by Magendran, KRPuram, Bangalore

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

Thursday 13 December 2018

அற்புத மருந்துங்க..

  1. வாழ்க்கையில் - குடும்பத்தில்,
  2. நிம்மதி இல்லையா?பிரச்சனையா?
  3. தீராத வியாதியா?
  4. வியாபாரத்தில் நஷ்டமா?
  5. குழந்தை பாக்கியம் இல்லையா?
  6. கல்வி, அறிவு, செல்வம் வேண்டுமா?
  7. தீர்க்க ஆயுள் வேண்டுமா?
  8. மரணத்தை வெல்ல வேண்டுமா?

கவலை வேண்டாம்...
நல்ல மருந்து...
சஞ்சலம் தீர்க்கும் மருந்து...
சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து...
நம்முள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து..
சொல்லால் அளவா மருந்து...
சுயஞ்ஜோதி மருந்து எனும் அருட்பெருஞ்ஜோதி
அற்புத மருந்துங்க..
ஆனந்த மருந்து..
அரிய மருந்துங்க...
பெரிய மருந்துங்க... 
ஞான மருந்துங்க..
இந்த மருந்து எங்கும் விலைக்கு கிடைக்காதுங்க..
விற்க, வாங்க முடியாதுங்க..
புண்ணியம் எனும் ஜீவகாருண்ய ஒழுக்கம் செய்தால் மட்டும் இந்த மருந்து கிடைக்கும்ங்க...
வேரெறங்கும் கிடைக்காதுங்க...

கிடைக்குமிடம்.. .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் ...
வேறு எங்கும் கிளைகள் இல்லைங்க..
நன்றி. வந்தனம்...

Tuesday 11 December 2018

Today Poor Feeding by Thiru Magendran Family

இன்றைய அன்னதானம் திரு.மகேந்திரன் அவர்கள் வழங்கினார்கள். அவர்கள் எல்லா நலமும்,வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால்,  அந்தச் 
சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

Thursday 6 December 2018

Today Poor feeding by Sanmarkka Anbar.Kathir & Family

திரு.கதிர் அவர்கள் நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை.

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் 
சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

Saturday 1 December 2018

1 Dec 2018 .. Poor Feeding on behalf of Sri.Kalawathy

இன்றைய அன்னதானம் செல்வி.கலாவதி அவர்கள் வழங்கினார்கள். அவர்கள் எல்லா நலமும்,வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம்     செய்யத்தக்க தென்பது
கடவுளாணை யென்றறிய வேண்டும்.

Friday 30 November 2018

Poor Feeding by Magendran, Bangalore


ü  
மனிதர்கள் மாத்திரம் பசியாற்றுவிக்கின்ற சீவகாருணிய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்கவேண்டுமென்றும் கடவுள் விதித்திருக்கின்ற படியால்

ü  பசித்த சீவர்களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை யுண்டுபண்ணுகின்ற சிறப்பினையே   செய்யவேண்டுமென்றும்

Thursday 29 November 2018

Today Annadhanam on behalf of Siva,Bangalore

சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் - வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற்      கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் ...வள்ளலார்

Sunday 25 November 2018

கஜாவின் துயர் துடைக்க "வள்ளலார் அருளிய மந்திரம்"

கஜா புயலுக்கு தங்களால் பொருளால் உதவி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை.. 

மனத்தாலும்,நாவாலும்  வள்ளலார் அருளிய இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்வோம்.

"பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுற காத்தருள் அருட்பெருஞ்ஜோதி"

வள்ளலார் அருளிய இம்மந்திரத்தை தினமும்  குறைந்தது 1008 முறை உச்சாடனம் மனத்தாலும்,வாக்காலும் உயிர்களுக்கு ஜீவகாருண்யம் செய்வோம்.

கண்டிப்பாக அனைவராலும் முடியும்.உயிர் இரக்கத்தை கடைப்பிடிப்போம்

Wednesday 21 November 2018

கஜா புயல்: Help /contacts

Electricity Help மின்சாரம் இல்லாத ஊருக்கு ்2000வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது அவசர தேவை படுபவர்கள் தொடர்பு  9500764610 7305103190 ##வாடகை #வேண்டாம்.

 ஜெனரேட்டர்
தேவை இருந்தால் அனுகவும்...

இடம் - கரிக்காடு, பட்டுக்கோட்டை ...
9894503455
9042324217
தம்பி Pandian GA

#பட்டுக்கோட்டை வாசுகி திருமண மண்டபத்தில் உணவு தயார் நிலையில் உள்ளது..
தொடர்புக்கு : 9443743072 பழனி

மன்னார்குடி:: 
உணவு பால்  தேவைக்கு தொடர்பு கொள்ளவும் 9944884459

#
தஞ்சை அருகில் கிராமங்களில் குடிநீர் தேவைக்கு மட்டும்  அழைக்கவும் ..
80 72340883
#பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும் 7010207765

கஜா புயல்: பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் 

தஞ்சை & திருவாரூர்: ஷெரில்- 94426 13008, நாகை: ஷெரீப்- 94433 89219, புதுக்கோட்டை: ராஜ்குமார்- 94448 30943இல் தொடர்பு கொள்ளலாம்
 #Petrol #Diesel #GajaCyclone

 வாகனம் Omr, பெருங்களத்தூர், திண்டிவனம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக செல்கிறது.

வழியில் நிவாரண பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு.
9840128425, 9626632362
9884491604, 8667274431 

: மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும்.

ராம் 7871892877 
பாலாசி 9944332270 
ராசா +91 88838 88147 
ரஞ்சித் +91 90471 83130 

மன்னையின் மைந்தர்கள் குழு

Tuesday 20 November 2018

நல்வழி.6.பேராசை கூடாது

 6.  உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
       கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
       கடலோடி மீண்டு கரையேறி னாலென்
       உடலோடு வாழும் உயிர்க்கு

(ஒருவர்க்கு - ஒருவருக்கு,
 உள்ளது ஒழிய-(ஊழினால்) உள்ள அளவல்லாமல், 
ஒருவர் சுகம் - மற்றொருவருடைய சுகங்களை,
 கொள்ள,-அநுபவிக்க விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்;
 (ஆதலால்) குவலயத்தில்-பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, 
வெள்ளக் கடல் ஓடி-வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள் தேடி), மீண்டு கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், 
என் - அதனாற் பயன் என்ன?

கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் ஊழினளவன்றி அனுபவிக்க முடியாது.

Saturday 17 November 2018

நல்வழி :: கவலையுறுதல் கூடாது


    5.  வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
       பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
       நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
       துஞ்சுவதே மாந்தர் தொழில்.

வாராத-(ஊழால்) வரக்கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும்,
 வாரா - வாராவாம்; 
பொருந்துவன - (ஊழால்)
வரக்கூடியவை, 
போமின் என்றால் - போயிடுங்கள் என வெறுப்பினும், 
போகா-போகாவாம்; 
இருந்து ஏங்கி - (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, 
நெஞ்சம் புண் ஆக - மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து, 
துஞ்சுவதே - மாண்டு போவதே, 
மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்க
தன்று.

Friday 16 November 2018

நல்வழி . 4.காலம் நோக்கிச் செய்க


எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
       புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
       மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
       ஆங்கால மாகு மவர்க்கு.

யார்க்கும் - எத்தன்மையோர்க்கும், 
புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழுதல்லாமல், 
ஒரு கருமம்-ஒரு -காரியத்தை, 
எண்ணி-ஆலோசித்து, செய்யொண்ணாது - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது)
 கண் இல்லான்-குருடன், மாங்காய் விழ - மாங்காயை விழுவித்தற்கு, 
எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் - புண்ணியம் வந்து கூடும் பொழுது, 
அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும்.

புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன்.

Thursday 15 November 2018

நல்வழி.3.ஈதலின் சிறப்பு

ஈதலின் சிறப்பு

    3.  இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
       இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
       உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
       விண்டாரைக் கொண்டாடும் வீடு.

(பதவுரை) இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும்,  நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. 

 பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் . (3)

நல்வழி.2)ஈயாமையின் இழிவு

ஈயாமையின் இழிவு

    2.  சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
       நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
       இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
       பட்டாங்கில் உள்ள படி.

(பதவுரை) சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர்-உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி-உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.

கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை.

நல்வழி.1

நன்மையே செய்க

    1.  புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
       மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
       ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
       தீதொழிய நன்மை செயல்.

(பதவுரை) புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.

புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க.

Thursday 1 November 2018

சேலத்தின் மகானோ...?? மகாசித்தரோ...?

*சேலத்தின் மகானோ...??* மகாசித்தரோ...? விலங்குகளுக்கு உணவளிக்கவே பிறவி  எடுத்த மாமனிதர்.!

கேட்டார் பாருங்க ஒரு கேள்வி 
கோடி பதில் உள்வைத்து.!

இன்று மதியம் சேலம் கலெக்டர் பங்களா பின்புறம் காவல் துறை DIG அலுவலகத்திற்கு சென்றிருந்தேன் காவல்துறையை சார்ந்த நண்பர் திரு.முருகனோடு பேசிக்கொண்டிருந்தேன் அப்போது அவர் எனக்கு வயதான முதியவர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். 

அவரின் வயது 86.நாட்டு வைத்தியம் செய்வாராம் தன் சிறிய இரண்டு சக்கர வாகனத்தில் விதவிதமான பைகளில் பலவிதமான உணவுகளை மாட்டி வைத்திருந்தார் ஒரு பெட்டியிலும் உணவுகள் வைத்திருந்தார் அவர் ஓர் சப்தம் செய்தார் அந்த இடத்தில் பல தெரு நாய்கள் ஓடி வந்தன வரிசையாக அவைகளுக்கு இனிப்பு,காரம் என வித விதமாக விருந்து படைப்பது போல் கொடுத்தார்  பின் இட்லி,பழங்களை பிட்டு அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர்மீது வைத்தார்.நான் எதற்காக அய்யா அங்கு வைக்கிறீர்கள் என்றேன் இப்ப பாருங்க அதைச் சாப்பிட வருவாங்க உங்களுக்கே புரியும் என்றார். சற்று நேரத்தில் அணில்கள் ஓடோடி வந்து உணவுகளை சாப்பிட்டது.பிறகு மற்றொரு இடத்தில் உணவுகளை வீசினார் பறவைகள் வந்து சாப்பிட்டது. மண்ணில் பொந்துகள் உள்ள இடத்தில் உணவுகளை வைத்தார் பெருக்கான் வந்து சாப்பிட்டது  

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது என் வாழ்நாளில் எலி வகை பெருக்கான்களுக்கு உணவு வைப்பதையும் அவைகளும் உடனே வந்து சாப்பிடுவதையும் இப்போது தான் பார்த்தேன். 

மீதம் உள்ள உணவுகளை குரங்குகளுக்கு வைக்கிறார். 
தினமும் ரூ.2000/=க்கு உணவுகள் வாங்குகிறார்.
கலெக்டர் பங்களா, அஸ்தம்பட்டி,புதூர்,செட்டி சாவடி,கொண்டப்பநாய்கன் பட்டி,ஏற்காடு அடிவாரம் என்று சுமார் 20.கிலோமீட்டர் 
தூரம் தன் சேவையை செய்கிறார். 
நான் அவரிடம் தங்களுக்கு வருமானம் ஏது ஐயா என்று கேட்டேன் நாட்டு வைத்தியம் பார்ப்பேன் தினமும் 2000.கிடைக்கும் வண்டிக்கு பெட்ரோல் போட்டது போக மீதம் ஜீவன்களுக்குத்தான் உணவு வாங்கி அளிப்பேன் என்றார். எவ்வளவு காலமாக இதை செய்கிறீர்கள் என்றேன்.
சுமார் 65.வருடங்களாக செய்கிறேன் என்றார்.

உங்களுக்கு என்ன நன்மை இதனால் என்று கேட்டேன் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்து நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு நீ பதில் சொல் என்றார். 
இந்த 65.ஆண்டுகாலமாக நான் செய்யும் இந்தப் பணியில்,ஒரு நாள் கூட எனக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டதில்லை,எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை தொடர் மழை பொழிந்தாலும் 
எனக்கு தடை ஏற்பட்டதில்லை 
தர்மம் செய்ய எல்லோராலும் 
முடியாது இதெல்லாம் பிறவி பயன் பிராப்தம் வேணும் தம்பி என்று முடித்தார்.!

65.ஆண்டு சேவை...???
தடை ஏதுமில்லை...???
100.பதில் மனதில் ஓடின.!!
இவரை சந்தித்தது மிகவும் பெருமையென மகிழ்கிறேன் 
உறவுகளே...
சேலம் பகுதி உறவுகளே...
இவரைக் கண்டால் ஐந்துநிமிடம் பேசி,ஒரு வாழ்த்து கூறி. 
ஆசி பெற்று   செல்லுங்கள். 
வாசித்த நெஞ்சங்களுக்கு 
வணக்கம்.! 

கண்ணால் கண்டதை காணிக்கை யிக்கியுள்ளேன்.  
விரைவில் அந்த அற்புத மனிதருடன் ஒரு நாள் பயணிக்க உள்ளேன்.🙏🙏🙏

கம்பு செய்யும் உதவி

Thursday 4 October 2018

21 oct 2018 சன்மார்க்க அன்பர் ஹரிஹரன் திருமணம் முன்னிட்டு பசி ஆற்றுவித்தல்

சன்மார்க்க அன்பர் ஹரிஹரன் திருமணம் முன்னிட்டு   தொடர்ந்து மாதந்தோறும் பூச தினத்தன்று  அன்னதானம் செய்தார். வள்ளலார் அருளோடு வருகின்ற 21 Oct 2018 திருத்தணி முருகன் சந்நிதியில் திருமணம் நடைப்பெற உள்ளது. மணமக்கள் நீடூழி திருவருளோடு வாழ பிரார்த்தனை செய்வோம்.

Thursday 20 September 2018

இன்றைய பசி ஆற்றுவித்தல் மகேந்திரன் குடும்பத்தினர்.. @Bangalore

இன்றைய பசி ஆற்றுவித்தல் மகேந்திரன் குடும்பத்தினர்..நீடுழி வாழ பிரார்த்தனை.

Wednesday 19 September 2018