Friday 8 February 2019

பசி ஆற்றல் திரு.கதிர் குடுமபத்தினர்

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

Sunday 3 February 2019

நல்வழி.9.குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

9.  ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
       ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
       நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
       இல்லையென மாட்டார் இசைந்து

ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், 
அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, 
ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், 
உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; 
(அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர், 
நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும், 
ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, 
இசைந்து - மனமிசைந்து, 
இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் .

Saturday 2 February 2019

ஞானிகள் பற்றற்றிருப்பர்

ஞானிகள் பற்றற்றிருப்பர்

    7.  எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
       பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
       அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
       பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, 
இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும், 
மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும், 
புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; 
நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; 
ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, 
பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்;
 பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள், 
ஆம்: அசை.

உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள்

Pongal Celebration @ KR PURAM Bangalore

Pongal Celebration @  KR PURAM Bangalore

Sponsored By Thayavuthiru.Damotharan ayya Bangalore