Friday 6 September 2019

Poor Feeding By Th. Parameshwari Amma And Team



புலால் உண்ணாமை பற்றி திருமூலர் பெருமான்

அசைவம் தின்ன சொல்லி வற்புறுத்தினால் அவனுக்கு பன்றி பிறவி

*கொன்றிலாரை கொல்லச் சொல்லி தூண்டினார் தின்டிலாரை தின்னச் சொல்லி தண்டித்தார் பன்றியாய் படியில் கிடந்தது ஏழ் நரகம் ஒன்றுவார்
அரன் மீது ஆணை

*திருமூலர்* 

*மாமிசம்* உண்ண வேண்டி பிற உயிர்களை கொலை செய்பவனை காட்டிலும் *அதனை கொல்லு என சொல்பவரும்* 

*மாமிச உணவை உண்ண மறுத்தவரை* உண்ணு உண்ணு என்று பயங்காட்டி துன்புறுத்தி உண்ண வைப்பவனும் 
*நரகம் போவார்கள்* .

ஏழு பிறப்பும் சாக்கைடையில் உழலும் *பன்றியாய்* பிறந்து இறந்து மீண்டும் *நரகம்* புகுவர் 

*இது சிவன் மீது ஆணை* என்று திருமூலர் சாபம் விடுகிறார்  

ஆதலால் நாக்கிற்கு அடிமையாகி கிடைத்தற்கரிய இந்த மனித பிறவியை *மாமிசத்தை* உண்டு அதை வீணடித்து மீண்டும் மீண்டும் *பன்றியாக* பிறக்க ஆயத்தமாவது ஒரு பகுத்தறிவாளிகள் செய்யும் செயலா? 

*வள்ளலார்* சொன்னது போல புத்தி உள்ள பிள்ளை என்றால்  நெருப்பு என்றால் சூடு என்று உணர வேண்டும்.

அதைப்போல உயிர்க் கொலை என்றால் அது *பாவம்* என்று உணர்ந்து ,
இனிமேல்   வள்ளுவர் வாழ்த்தியது போல வாழ பழகுங்கள்.

தன்னூன் பெருக்கற்த் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி எல்லா உயிரும் தொழும்