குறிப்புக்கள்


1.   கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்துச் சீவர்கள் காருணியம் வைப்பதே சம்மதவென்று உண்மையாக அறியவேண்டும்.
2. சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம்.
3. சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக்
4.  பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது,
5. இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.
6. புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே.
7. பாவமென்பது சீவகாருணியமில்லாமை யொன்றே.
8.  இந்தத் தூலதேகத்தில் சீவனாக இருக்கிற ஆன்மாவும்.
9. அறிவுக்கறிவாயிருக்கிற கடவுள் இயற்கைவிளக்கம்.
10.கரணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகாரக் கருவிகளாகுமென்று அறிய வேண்டியது.
11. இன்பதுன்பங்களை ஆன்மாவே அனுபவிக்குமென்று அறியவேண்டும்.
 12.இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.


 
1.   அந்த மாயையின் விகற்ப ஜாலங்களாகிய பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை என்பவைகளால் அந்தத் தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடுமென்றும், அப்படி அபாயங்கள் நேரிடாமல் கரணேந்திரிய சகாயங்களைப் பெற்ற தம் மறிவைக் கொண்டு சர்வ ஜாக்கிரதையோடு முயற்சிசெய்து தடுத்துக் கொள்வதற்குத் தக்க வல்லப சுதந்திரம் சீவர்களுக்கு அருளாற் கொடுக்கப்பட்ட தென்றும், அந்தச் சுதந்திரத்தைக் கொண்டு சீவர்களெல்லாம் தேகங்களிலிருந்து அபாயங்களை நீக்கி ஆன்மலாபத்தைப் பெறுதற்கு முயற்சி செய்யக் கடவரென்றும்,


2.   ஊழ் வகையாலும் அஜாக்கிரதையாலும் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்து கொள்ளமாட்டாமல் வருந்துகின்ற சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்க வேண்டுமென்றும்,

3.   ஊழ்வகையாலும் அஜாக்கிரதையாலும் பசி கொலை    யென்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமுமில்லாத சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத்தக்க அறிவும் சுதந்திரமுள்ள சீவர்கள் வஞ்சியாமல் தயவினால் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு முக்கியமான லட்சியமென்றும்,

4.   அதில் சத்தியமாக நம்பிக்கை வைத்துப் பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்கியும், கொலைப்படும் சீவர்களுக்குச் செய்வகையால் கொலை நீக்கியும், திருப்தி இன்பத்தை உண்டுபண்ணுவதே மேலான பிரயோசன மென்றும் அறியவேண்டும்.

சீவகாருணியத்தின் வல்லபம் யாதென்றறியவேண்டில்:-
பிற உயிர்களிடத்துப் பசி கொலை முதலியவற்றுள் எதனாற் காருணியந் தோன்றியதோ அதனால் அவ்வுயிர்கள் வருந்தாதபடி அதை நீக்குதற்கு முயல்விப்பது அதன் வல்லபமென்றறியவேண்டும்.


சீவகாருணித்தின் பிரயோசனம் யாதென்றறியவேண்டில்:-
உயிர்களுக்கு இன்பம் உண்டுபண்ணுவது அதன் பிரயோசனம் என்றறியவேண்டும்.



13.  பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குதற்குத் தண்­ர் கொடாமலிரார்கள்.

14.  பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குதற்குத் தண்­ர் கொடாமலிரார்கள்.

15.  பசியினால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்விக்கத் தக்க தயவுடையவருக்குப் பிணியினால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதற்கு தயவுண்டாகாம லிராது.

16.  பசித்தவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்குவிக்கின்ற தயவுடையவர்களுக்கு, இச்சையால் வருந் துன்பங்களை நீக்குவிப்பதற்குத் தயவு வராமலிராது.

17.  பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுள்ளவர்களுக்குச் சுதந்தர மற்ற சீவர்களது எளிமையை நீக்கத் தயவுவராமலிராது.

18.  பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவருக்குப் பயத்தை நிவர்த்தி செய்விப்பதில் தயவு வராமலிராது.

19.  பசியினால் வருந் துன்பத்தையும், கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு முக்கிய வட்சிய மென்றறிய வேண்டும்.

20.  பசியால் வருங் கொலையை ஆகாரத்தாலன்றி வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப்படாது.

21.  கொலையால் வருந்துன்பத்தைப் பசியால் வருந்துன்பத்திலமைத்து அடிக்கடி வலியுறுத்துகின்றதென்றறிய வேண்டும்.

22.  ,இவ்வகை முழுதும் சீவ காருணியமேயாதலால் எல்லா உயிர்களிடத்தும் சீவ காருணியம் வேண்டுமென்று கடவுளால் ஆணை செய்ததென்றறியவேண்டும்.

23.  ஒரு சீவனைக் கொன்று ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கமே யல்லவென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இவைகட்கு முழு விரோதமென்றும் அறியவேண்டும்.

24.  புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று    சொல்லலாம்? எல்லாத்  தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

25.  நரக வேதனை, சனனவேதனை, மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்றும்,

26.  அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து, எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.

27.  பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவியென்றே அறியவேண்டும்.

28.  பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து, அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும்.

29.  கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்துச் சீவர்கள் காருணியம் வைப்பதே சம்மதவென்று உண்மையாக அறியவேண்டும்.

30.  அறிவு விளங்கிய  சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்.

31.  சீவகாருணிய ஒழுக்கத்தை உடையவர்களாகி அருந்தல்  பொருந்தல் முதலிய பிரபஞ்ச போகங்களை அனுபவிக்கின்ற சமுசாரிகளெல்லாம் சர்வசக்தியுடைய கடவுளருளுக்கு முழுதும் பாத்திரமாவார்கள்.

32.  அப்படிச் செய்யில் பசித்தவர் பசி நீங்கி அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார்களென்றும் சத்தியமாக அறியவேண்டும்.

33.  சீவகாருணிய ஒழுக்க முடையவர்களாகிச் சீவர்களைப் பசி யென்கின்ற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் செய்கையை யுடைவர்க ளாயினும், தேவர், முனிவர், சித்தர், யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்களென்று சர்வசக்தியையுடைய கடவுள்சாட்சியாக சத்தியஞ் செய்யப்படுமென்று அறிய வேண்டும்.

34.  இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங்களும், கடவுளருளின் ஏகதேச சொரூப ரூப சுபாவங்களாகவே அறியவேண்டும்.






ஒரு சீவனை வதைத்து பசியாற்றுதல்:
சீவகாருணிய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறியவேண்டும்:

·        எல்லாச் சீவர்களும் இயற்கையுண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்றபடியாலும்,

·        கடவுள் இயற்கை விளக்கம் மாறுபடும் போது சீவத் தன்மை இல்லாதபடியாலும், கடவுளியற்கை விளக்கமும் ஜீவனியற்கை விளக்கமும் ஒன்றோடொன்று மாறுபடாதாகலாலும்,

·        கடவுளியற்கை விளக்கமும் சீவன் இயற்கைவிளக்கமும், அந்தந்தத் தேகங்களினும் விளங்குகின்ற படியாலும்,

·        ஒரு சீவனை வதைத்து அதனால் மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கத்திற்கு முழு விரோதமென்றே அறியவேண்டும்.
 


1.
1.    எல்லா மனிதர்களுக்கும் பசியால் வரும் நஷ்டங்களும் துன்பங்களும்,பசி நிவர்த்தியால் வரும் லாபங்களும் இன்பங்களும் பொதுவில் ஒரு தன்மையாயிருந்தாலும்,

2.    பசியால் வரும் நஷ்டங்களையுந் துன்பங்களையும் மன முதலான அந்தக்கரண விருத்தியினாலும் கண் முதலான இந்திரியங்களாலும் மிகவும் அறிந்து கொள்கின்ற ஆன்ம அறிவு ஒத்திருத்தலாலும்,

3.    மனிதர்களுக்கு ஊழ்வகையினால் அருள் நியதியின்படி கொடுப்பிக்கின்ற ஆகாரமட்டில் சீவித்துத் தேகத்தை வைத்திருக்கக் கூடாமையாலும்,

4.    தங்கள் முயற்சியாலும், அறிவாலும், சுதந்தரத்தாலும் சம்பாதிக்கின்ற ஆகாமிய ஆகாரத்தாலும் பசியை நீக்கித் தேகத்தை வைத்திருக்க வேண்டுமாதலாலும்,

5.  ஆகாயமியத்தால் சம்பாதிக்கின்ற சீவசுதந்தரமுள்ள மனிதர்களுக்கு அருளால் மிகவுங் கொடுக்கப்பட்ட படியாலும்!
 
6.    ஊழ்வகையால் ஆகாரம் நேரிடாமல் பசித்து வருந்தும்படியாகவும்; அந்தப் பசியை நீக்கும் நிமித்தம் ஒருவரையொருவர் எதிர்பார்க்கும் படியாகவும்; அவர் தயவினால் ஆகாரங் கொடுத்து அப்பசியை நீக்கி அவரை நன்முயற்சியிற் செலுத்தவும்
 
7.    ஆகாரங் கொடுத்தவர் சித்திமுத்திகளையடையவும் அருள் நியதியாக விதிக்கப்பட்ட படியாலும்,
 
8.   மனிததேகம் மற்றச் சீவதேகம்போல இலேசிலே எடுக்கக் கூடாதாகலாலும்,

9.   மனித தேகத்தில் ஆன்மவிளக்கமும் அருள் விளக்கமும் மிகவும் விளங்குதலாலும்,

10. இந்த மனித தேகம் போனால் மீளவும் இந்தத் தேகம்வருமென்கிற நிச்சய மில்லாமையாலும்,

11. இந்த மனித தேகம் முத்தியின்பம் பெறுதற்கே எடுத்த தேகமாதலாலும், இந்த மனிததேக மாத்திரமே முதற் சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாதலாலும்,

12. மனிதர்கள் மாத்திரம் பசியாற்றுவிக்கின்ற சீவகாருணிய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்கவேண்டுமென்றும் கடவுள் விதித்திருக்கின்ற படியால், பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற சீவகாருணிய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்த வேண்டுமென்று அறிய வேண்டும்.

13. மனிதர்கள் பிராரத்தப்படி நியதி ஆகாரத்தைப் புசித்துப், பிராரத்த அனுபவத்தை நீக்கிக் கொண்டு, ஆகாமியத்தால் முயற்சி ஆகாரத்தைப் புசித்துக், கரணேந்திரிய தேகத்தை வலுவுள்ளதாகச் செய்து கொண்டு, சன்மார்க்க சாதனத்தை அனுசரித்துச் சித்தி முத்தி இன்பங்களைப் பெறக்கடவரென்று கடவுள் விதித்திருக்கின்றபடியால்


பசி
பொதுவில் பசியினால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்து ஆகாரத்தினால் திருப்தி இன்பத்தை உண்டுபண்ண வேண்டு மென்றும்
விகற்ப மாயாகாரியப் பிண்டப்பகுதி நெருப்பு
கொலை
சீவ      கொலையைத் தம்மாற் கூடிய வரையில் எவ்விதத்திலாயினும் தடை செய்து உயிர் பெறுவித்துச் சந்தோஷ’ப்பிக்க வேண்டுமென்றும்
விகற்ப பூதகாரியக் கொடுந்தொழில்
பிணி
பிணி பயம் முதலிய மற்ற ஏதுக்களால் சீவர்களுக்குத் துன்பம் நேரிடில் அத்துன்பங்கள் தங்களால் நீக்கத்தக்கவை களாகில் நீக்கவேண்டுமென்றும்
விகற்ப மாயாகாரியப் பிண்டப் பகுதி வேற்றுமை விளைவு
பயம்
கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கம்
தாகம்


இச்சை

மேன்மேலும் கருதச் செய்கின்ற சித்தவிருத்தி
எளிமை

கல்வி செல்வம் முதலிய கருவிகளைத் தற்சுதந்திரத்திற் பெறாமை.
 






No comments:

Post a Comment