Thursday 2 August 2018

மனிததேகம் சிறப்பு


ஓம் சற்குரு  இராமலிங்காய  நம

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

1.       நாம் எல்லா ஜனனங்களையும் தப்பி இந்த மேலான பிறவி எடுத்தது எல்லாம் வல்ல சிவத்தின் திருவருளை பெறுவதற்கே. அதனை எந்தவித பிரயாச்சத்திலாவது அந்த அருளை அடைந்து விட வேண்டும் .
2.       கடவுள் சர்வ தயாபரன் . சர்வ வல்லமை உடையவன். ஆகையால் , நம்மையும் சர்வ ஜீவா தயை உடையவர்களாய், சர்வ வல்லமையும்  பெற்றுக்கொள்ளும் படி இந்த மனித தேகத்தில் வருவித்தார்.
3.       மனித தேகம் மற்ற ஜீவா தேகம் போல் இலேசிலே எடுக்க கூடாதாததாலும்,
4.       மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும் , அருள் விளக்கமும் மிகவும் விளங்குததாலும்,
5.       இந்த மனித தேகம் போனால்  மீண்டும் வரும் என்ற நிச்சயம் இல்லாமை ஆகலாலும் ,
6.       இந்த மனிததேகம் முத்தி இன்பம் பெறுவதற்கே எடுத்த தேகம் ஆதலாலும்,
7.       இந்த மனிததேகம் மாத்திரமே முதற் சிருஷ்டி தொடங்கி, கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவை உடைய தேகமாதலாலும்,
8.       மனிதர்கள் மாத்திரம் பசி ஆற்றுவிக்கின்ற ஜீவகாருண்ய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப்  பிடிக்கவேண்டும் என்றும், கடவுள் விதித்திருக்கின்ற படியால் ,பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்த வேண்டும் என்று அறிய வேண்டும்.
9.       உலகில் மனிதப்பிறப்பைப்  பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தை காலம் உள்ள போதே அறிந்து அடைய வேண்டும் 
10.    உலகில் மனிதப்பிறப்பைப்  பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்மஇன்பசுகத்தை காலம் உள்ள போதே விரைந்து, அறிந்து அடைய வேண்டும்