🔥சாகாக் கல்வி 🔥
திருவருட்பிரகாச வள்ளல்பெருமான் காயத்திரி மந்திரத்தின் உண்மைப்பொருளை அதில்உள் சாகாக்கல்வியின் இரகசியத்தை வெளிப்படையாக சுத்த சன்மார்க்க விளக்கமாக திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्यः धीमहि धियो यो नः प्रचोदयात्*
**ஓம் பூர் புவ: ஸ்ஸூவ:*
*
* *தத் சவிதுர்வரேண்யம்*
*பர்கோ தேவஸ்ய: தீமஹி*
*தியோ யோ ந: ப்ரசோதயாத்.**
வள்ளல்பெருமானின் விளக்கம் பின்வருமாறு.
காயத்ரி:
கா-ய-த்ரி.
க -ஜலதத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம்.
ய -வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம்.
ஆ -அக்னிதத்துவமாகிய காரணதேகம், ருத்ரஸ்வரூபம்.
த்ரி -மூன்று.
அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூபசுபாவ குணங்களை
ஐயம்
திரிபு
மயக்க மின்றிக் கடந்தால், *ஜனனமரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம்.* எப்படியெனில்: காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு. பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: இரு - இரண்டு, ஜீவகாருண்யம் தத்துவவிசாரம் ஆகிய இரண்டையும்; பத்து (பற்று) - பிடி, பற்றினால்; நான்கு - நாலாகிய ஜீவகாருண்யம், ஈசுரபத்தி, பாச வைராக்கியம், பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம்.
மேலும், தத்துவ த்ரேயங்களான மூன்று தேகங்களுக்கும் தத்துவம் யாதெனில்:- வர்ணம் இருபத்துநான்கு. ஆதலால், ஸ்தூலதத்துவம் இருபத்துநான்கு. பாதம் மூன்று, காயத்ரி திரி மூர்த்தி ஸ்வரூபம், இவற்றுள் ஒன்றில் ஒன்றைக் கொடுக்கவந்தது ஒன்று:- 3,3,1 ஆகிய இவற்றைச் சேர்க்க ஏழு ஆகிறது. ஆதலால், சூட்சும தத்துவம் ஏழு. இதற்குச் சத்தி மூன்று. அநுபவசத்தி ஒன்று, சமத்துவம் ஒன்று. ஆக ஐந்து. ஆதலால் காரணதேக தத்துவம் ஐந்து. மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தால், அனுபவம் விளங்கும். எப்படியெனில்:- ஓதயாத்: ஓ ஆன்மஅறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா பிரமமாதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம்.
-வள்ளலார்.
No comments:
Post a Comment