Thursday, 9 January 2020

காயத்ரி மந்திரம் ..வள்ளல்பெருமான் விளக்கம்

🔥சாகாக் கல்வி 🔥

திருவருட்பிரகாச வள்ளல்பெருமான் காயத்திரி மந்திரத்தின் உண்மைப்பொருளை அதில்உள் சாகாக்கல்வியின் இரகசியத்தை வெளிப்படையாக சுத்த சன்மார்க்க விளக்கமாக திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 *ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्यः धीमहि धियो यो नः प्रचोदयात्* 

 **ஓம் பூர் புவ: ஸ்ஸூவ:* 
 *
* *தத் சவிதுர்வரேண்யம்* 

 *பர்கோ தேவஸ்ய: தீமஹி* 

 *தியோ யோ ந: ப்ரசோதயாத்.** 

வள்ளல்பெருமானின் விளக்கம் பின்வருமாறு.

காயத்ரி: 

கா-ய-த்ரி.
 க -ஜலதத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம்.

 ய -வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம். 

ஆ -அக்னிதத்துவமாகிய காரணதேகம், ருத்ரஸ்வரூபம். 

த்ரி -மூன்று. 

அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூபசுபாவ குணங்களை 
ஐயம் 
திரிபு 
மயக்க மின்றிக் கடந்தால், *ஜனனமரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம்.* எப்படியெனில்: காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு. பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: இரு - இரண்டு, ஜீவகாருண்யம் தத்துவவிசாரம் ஆகிய இரண்டையும்; பத்து (பற்று) - பிடி, பற்றினால்; நான்கு - நாலாகிய ஜீவகாருண்யம், ஈசுரபத்தி, பாச வைராக்கியம், பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம்.
மேலும், தத்துவ த்ரேயங்களான மூன்று தேகங்களுக்கும் தத்துவம் யாதெனில்:- வர்ணம் இருபத்துநான்கு. ஆதலால், ஸ்தூலதத்துவம் இருபத்துநான்கு. பாதம் மூன்று, காயத்ரி திரி மூர்த்தி ஸ்வரூபம், இவற்றுள் ஒன்றில் ஒன்றைக் கொடுக்கவந்தது ஒன்று:- 3,3,1 ஆகிய இவற்றைச் சேர்க்க ஏழு ஆகிறது. ஆதலால், சூட்சும தத்துவம் ஏழு. இதற்குச் சத்தி மூன்று. அநுபவசத்தி ஒன்று, சமத்துவம் ஒன்று. ஆக ஐந்து. ஆதலால் காரணதேக தத்துவம் ஐந்து. மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தால், அனுபவம் விளங்கும். எப்படியெனில்:- ஓதயாத்: ஓ ஆன்மஅறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா பிரமமாதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம்.

        -வள்ளலார்.

Monday, 6 January 2020

Prayer to Vallalar Devotee.Meenatchi Sundaram from Financial Crisis

கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால்அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.





Sunday, 5 January 2020

Poor Feeding by Th.Vasanthi Marimuthu

Support sticks sponsored by Damodaran ayya


கடவுளியற்கை விளக்கத்திற்கு இடமாகிய சீவதேகங்களென்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகுந் தருணத்தில் ஆகாரங் கொடுத்து அவ்வாலயங்களை விளக்கஞ் செய்விப்பதே சீவகாருணியம்





Saturday, 4 January 2020

Today Poor Feeding by Th.Arivazgan family

பசி என்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே சீவகாருணியம்












Friday, 3 January 2020

Poor Feeding by Sri.Kalavathy Family

பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம்





Thursday, 2 January 2020

Poor Feeding by Th.Hariharan family

கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால்அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.


Wednesday, 1 January 2020

Poor Feeding by Sri.Gayathri Krishnan Family

ஆன்மலாபம் ?

 எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.




எல்லா உயிர்களும் (84லட்சம் யோனிபேத ஜீவராசிகள்) இன்புற்று வாழ்க

💐🌹☘🌿🌾🍁🍀🌻🌼🌸🌺🥀🌹🌷💐🦔🐿🐀🐁🦥🦦🦡🦨🦝🐇🕊🦩🦢🦜🦚🦃🐓🐑🐐🦌🐕🐩🦮🐕‍🦺🐈🐏🐖🐎🐄🐂🐃🦘🦒🐫🐪🦏🦛🐘🦧🦍🦓🐆🐅🦀🐡🐠🐟🐬🐋🦈🐊🦞🦐🦑🐙🦕🦖🦎🐍🐢🦂🕸🕷🦗🦟🐜🐞🐌🦋🦅🦉🦇🐺🐗🐴🦄🐝🐛🦆🐥🐣🐤🐦🐧🐔🐒🙊🙉🙈🐵🐸🐽🐷🐮🦁🐯🐶🐱🐭🐹🐰🦊🐻🐼🐨🧞‍♂🧞‍♀🧟‍♂🧟‍♀💃👩‍🦽👨‍🦽👩‍🦯🚶‍♂🏃‍♀👩‍❤‍👨👨‍👩‍👦👩‍👩‍👦👩‍👦‍👦👨‍👨‍👧‍👦👨‍👧‍👧👨‍👧👨‍👦👩‍👧‍👧
எல்லா உயிர்களும் (84லட்சம் யோனிபேத ஜீவராசிகள்) இன்புற்று வாழ்க.🙏🙏🙏🙏

கொல்லா நெறியே குவளையமெல்லாம் ஓங்குக..

வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.

🌞🌕💥🔥🌟 

மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்

6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family  (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)