Tuesday, 20 February 2018

Vallalar Daily Quotes

இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து ,

  சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார்.

 தன் வேலைக்காரனை அழைத்து,

"இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா...." என்றார்.

 வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,

"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது...." என்றார்.

திடுக்கிட்ட பண்ணையார், 

"இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்..." என்றார்

இறைவன், "இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது..." என்றார்.

விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து, 

"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா....." என்றார்.

அவன் "ஆம்" என்றான்.

பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது.

 அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார்.

"உண்மையைச் சொல்,

 இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்..." எனறார்.

அவன், "உண்மையைச் சொல்லி விடுகிறேன்,

 வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், 

நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன்,

 மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.." என்றான்.

பண்ணையாருக்குப் புரிந்து விட்டது.

ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது....!!

ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி,

 இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை 

இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்......!!

Wednesday, 7 February 2018

Vishu - Revathi Marriage Day

விவாக (Marriage) முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத்திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும் ...........வள்ளலார்

Sunday, 4 February 2018

குழந்தை பேறு தடைகள் நீங்கியது

"பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை."  வள்ளலார் வாக்கு.

இந்த வாக்கிற்கு இணங்க பல வருட காலம் குழந்தை பேறு தடைகள் நீங்கி, ஜீவகாருண்ய விரதத்தால் மணிகண்டன் உறவினறுக்கு இன்று குழந்தை பிறந்து உள்ளது. அனைவரும் நீடுழி வாழ வள்ளலாரை வணங்குவோம்.

Thursday, 1 February 2018

குருவருள் வேண்டி பசி ஆற்றுவித்தல்

குருவருள் வேண்டி பசி ஆற்றுவித்தல்

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகஅனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி, அறிவு ,செல்வம், போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

Vadalur Thai Poosam...2018 ArutJothi Darshan

Thai Poosam...2018 ArutJothi Darshan @ Vadalur...

மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்

6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family  (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)