Monday, 11 March 2019

poor feeding on behalf of karthikeyan's birthday

சுபகாரியத்தில் உள்ளபடியே பசித்த சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்கத்தையும் கடவுளின்பத்தையும் வெளிப்படச்   செய்திருந்தார்களானால்,
 அந்த விளக்கமும் இன்பமும் அத்தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டுபண்ணுமல்லவா?

 ஆகலில் விவாக முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத்திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும்

Friday, 8 February 2019

பசி ஆற்றல் திரு.கதிர் குடுமபத்தினர்

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

Sunday, 3 February 2019

நல்வழி.9.குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

9.  ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
       ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
       நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
       இல்லையென மாட்டார் இசைந்து

ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், 
அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, 
ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், 
உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; 
(அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர், 
நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும், 
ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, 
இசைந்து - மனமிசைந்து, 
இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் .

Saturday, 2 February 2019

ஞானிகள் பற்றற்றிருப்பர்

ஞானிகள் பற்றற்றிருப்பர்

    7.  எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
       பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
       அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
       பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, 
இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும், 
மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும், 
புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; 
நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; 
ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, 
பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்;
 பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள், 
ஆம்: அசை.

உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள்

Pongal Celebration @ KR PURAM Bangalore

Pongal Celebration @  KR PURAM Bangalore

Sponsored By Thayavuthiru.Damotharan ayya Bangalore

மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்

6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family  (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)