Monday, 25 September 2017

சற்குரு யார்? Vallalar Answer

இன்புற்று வாழ்க.

"சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை.."

"மாமணி மன்றிலே ஞான சுந்தர வடிவ ஜோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே..."

 ..வள்ளலார்

Sunday, 24 September 2017

பசி போக்குதலே உண்மை வழிபாடு

பசித்திரு..தனித்திரு..விழித்திரு

பசித்திரு
தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் .
அமுதமாயினும் அதிகம்
புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக்  கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில்
ஆன்மப் பசியுடன் இருத்தல் ஆகும்.

தனித்திரு :
ஆசாபாசங்களில் அறிவை அழுந்த
விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக்கொண்டிருத்தல் , எவ்வித
கூட்டுறவுகளில் கலந்திருந்த
போதிலும் சீவன் பரமனை பற்றி
இருத்தலே தனித்திருத்தல் - மனம்
தனித்து அமைதி நிலையில் இருத்தல்
ஆகும்.

விழித்திரு :
மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன்முயற்சியில் ஈடுபடுத்தி பொய் ,
பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான  துவேச உணர்வுகளிலிருந்து
தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் -
விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .



' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்
🌞🔥🌝🌞🔥🌝🌞🔥🌝🌞🔥🌝

அமுதக் காற்றின் வியாபகத்தின் போது

இன்புற்று வாழ்க

அமுதக்  காற்றின் வியாபகத்தின் போது 

இந்திரிய அடக்கம், 
மனநெகிழ்ச்சி,
ஈசுர பக்தி,
அறிவு விளக்கம்,
தாங்கள் அறியாத  கடவுள் விளக்கம்
 

உண்டாகும்.

...வள்ளலார்.

Saturday, 23 September 2017

இறையவர் யார்?

*இன்புற்று வாழ்க*

*"எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்ஜோதியரே இறைவர் "*    

- *திருஅருட்பிரகாசவள்ளலார்*

Tuesday, 19 September 2017

ஜீவகாருண்யத்தின் லட்சியம்

ஜீவகாருண்யத்தின் லட்சியம்::

ஊழ்வகையாலும் அஜாக்கிரதையாலும் பசி கொலை    யென்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமுமில்லாத சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத்தக்க அறிவும் சுதந்திரமுள்ள சீவர்கள் வஞ்சியாமல் தயவினால் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு முக்கியமான லட்சியம்.


Monday, 18 September 2017

கடவுள் ஆணை

இன்புற்று வாழ்க 

எல்லா உயிர்களிடத்தும் சீவ காருணியம் வேண்டுமென்று கடவுளால் ஆணை செய்ததென்று அறியவேண்டும்.

..வள்ளலார்

Thursday, 14 September 2017

Vallalar Poor Feeding

ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் ..முழு விரோதம்

இன்புற்று வாழ்க

ஒரு சீவனைக் கொன்று ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கமே யல்லவென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இவைகட்கு முழு விரோதமென்றும் அறியவேண்டும

ஜோதி இராமலிங்கம்

Wednesday, 13 September 2017

பசிவேதனை

இன்புற்று வாழ்க

நரக வேதனை, சனனவேதனை, மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை


..சிதம்பரம் இராமலிங்கம்

மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்

6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family  (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)