Saturday, 9 February 2019
Friday, 8 February 2019
பசி ஆற்றல் திரு.கதிர் குடுமபத்தினர்
சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.
Wednesday, 6 February 2019
Monday, 4 February 2019
Sunday, 3 February 2019
நல்வழி.9.குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்
9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து
ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய்,
அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது,
ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால்,
உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்;
(அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர்,
நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும்,
ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு,
இசைந்து - மனமிசைந்து,
இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).
உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் .
Saturday, 2 February 2019
ஞானிகள் பற்றற்றிருப்பர்
ஞானிகள் பற்றற்றிருப்பர்
7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு
எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து,
இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும்,
மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும்,
புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது;
நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்;
ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல,
பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்;
பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள்,
ஆம்: அசை.
உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள்
Sunday, 27 January 2019
Thursday, 10 January 2019
Today Vallalar Poor Feeding by Sri.Kalawathy
உஉஉள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களையோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
ü ஆஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால்,ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்
Friday, 21 December 2018
ஜீவகாருண்யம்
🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲
சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ
காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் -
அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச்
செய்வித்தும் - ஆடல், பாடல், வரிசை,
ஊர்வலம் முதலிய விநோதங்களை அப்ப வர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில்
அழுந்தியிருக்குந் தருணத்தில் -
பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும், தமது மக்கள், துணைவர் முதலியோர்க்காயினும், ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது.
அப்போது, அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகின்றார்கள்.
இப்படி துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும், -ஆடல் ,பாடல்
வாத்தியம் , வரிசை ஊர்கோலம் முதலிய
வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரா
அன்னம் முதலிய பெருமைப்பாடுகளும்
அந்த ஆபத்தை தடை செய்யக்கண்ட
தில்லை.
அந்த சுப காரியத்தில் உள்ள
படியே பசித்த ஜீவர்களுக்கு ஆகாரங்
கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள்
அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்க
த்தையும்,கடவுளின்பத்தையும் வெளிப்பட செய்திருந்தார்களானால்
அந்த விளக்கமும் இன்பமும் அத் தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி, விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டு பண்ணும்
அல்லவா?,ஆதலின் விவாக முதலிய
விசேஷச் செய்கைகளிலும் தங்கள்தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென்று அறிய வேண்டும். 🌹 வள்ளலார் 🌹
🍒இனிய காலை வணக்கம். 🍒
Thursday, 20 December 2018
Today Pasi Atruvithal by Magendran, KRPuram, Bangalore
சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.
Subscribe to:
Posts (Atom)
மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்
6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)
-
Dear Sister/Brother, No one needs to panic seeing the rapidly spreading special fever. In all the Vallar Sanmarkka Sabhas in Tamil Nadu, the...
-
Support Sticks to Needy @ Bangalore KRPuram Sponsored by Bangalore Vallalar Devotee thayavu. Damotharan &friends
-
Bedsheets Distribution Phase I@ Bangalore , KR Puram Area, sponsered by Sri.Kalawathy Avargal
-
Vallalar Poor Feeding @ KRPuram, Bangalore With Sanmarkka Sathu.Murgan ayya
-
Volunteers list for distribution(Deepavali Vallalar Poor Feeding @ Bangalore) 1. Venkat 50 2. sund...
-
சீவகாருணிய ஒழுக்க முடையவர்களாகிச் சீவர்களைப் பசி யென்கின்ற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத...















