Sunday, 28 July 2019

Prayer for speedy Recovery of Kid. Adithya Arani


we will do poor feeding on behalf of kid.Adithya Arani today for speedy recovery. Let us pray our vallarperuman for this.

உடலுறு பிணியால் உயிருடல் கெடாவகை
அடல்உற காத்தருள்
அருட்பெருஞ்ஜோதி..

உடற்பிணி அனைத்தையும்
உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்பற தவிர்த்த அருட்சிவ மருந்தே.

சிற்சபை நடுவே திருநடம்
புரியும் அற்புத மருந்தெனும்
ஆனந்த மருந்தே...

....வள்ளலாரின் அகவல் மந்திர மொழிகள்

Saturday, 27 July 2019

ஆகார பக்குவங்களாலேயே எல்லா பிணிகளும் நிவர்த்தியாகின்றன

🌹பசியாற்றுவித்தல்🌹
 பசி மிகுதியினாலேயே எல்லா
 பிணிகளும் விருத்தியாகின்றன

 ஆகார பக்குவங்களாலேயே எல்லா பிணிகளும் நிவர்த்தியாகின்றன.

பிணிக்கு வேறு மருந்து கொடுப்பினும்,பக்குவ ஆகாரமே தேகம் நிலைத்து இருக்க ஆதாரமாய் இருக்கின்றது.

....வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம்

🙏🙏🙏🙏🙏🙏
பக்குவ  ஆகாரங்களை வழங்கி 
ஜீவர்கள் அவஸ்தை நீங்கப்பெற்று
இறையருளைப் பெறுவோமாக.🤲

Thursday, 23 May 2019

Poor Feeding on behalf of Th.Vasanthi Marimuthu













தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால், அந்தச்சீவகாருணிய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்கியத்தை உண்டு பண்ணுமென்பது உண்மை.

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டுபண்ணுமென்பது உண்மை.

மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்

6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family  (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)