Thursday, 15 November 2018

நல்வழி.3.ஈதலின் சிறப்பு

ஈதலின் சிறப்பு

    3.  இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
       இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
       உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
       விண்டாரைக் கொண்டாடும் வீடு.

(பதவுரை) இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும்,  நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. 

 பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் . (3)

நல்வழி.2)ஈயாமையின் இழிவு

ஈயாமையின் இழிவு

    2.  சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
       நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
       இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
       பட்டாங்கில் உள்ள படி.

(பதவுரை) சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர்-உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி-உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.

கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை.

நல்வழி.1

நன்மையே செய்க

    1.  புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
       மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
       ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
       தீதொழிய நன்மை செயல்.

(பதவுரை) புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.

புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க.

Thursday, 1 November 2018

சேலத்தின் மகானோ...?? மகாசித்தரோ...?

*சேலத்தின் மகானோ...??* மகாசித்தரோ...? விலங்குகளுக்கு உணவளிக்கவே பிறவி  எடுத்த மாமனிதர்.!

கேட்டார் பாருங்க ஒரு கேள்வி 
கோடி பதில் உள்வைத்து.!

இன்று மதியம் சேலம் கலெக்டர் பங்களா பின்புறம் காவல் துறை DIG அலுவலகத்திற்கு சென்றிருந்தேன் காவல்துறையை சார்ந்த நண்பர் திரு.முருகனோடு பேசிக்கொண்டிருந்தேன் அப்போது அவர் எனக்கு வயதான முதியவர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். 

அவரின் வயது 86.நாட்டு வைத்தியம் செய்வாராம் தன் சிறிய இரண்டு சக்கர வாகனத்தில் விதவிதமான பைகளில் பலவிதமான உணவுகளை மாட்டி வைத்திருந்தார் ஒரு பெட்டியிலும் உணவுகள் வைத்திருந்தார் அவர் ஓர் சப்தம் செய்தார் அந்த இடத்தில் பல தெரு நாய்கள் ஓடி வந்தன வரிசையாக அவைகளுக்கு இனிப்பு,காரம் என வித விதமாக விருந்து படைப்பது போல் கொடுத்தார்  பின் இட்லி,பழங்களை பிட்டு அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர்மீது வைத்தார்.நான் எதற்காக அய்யா அங்கு வைக்கிறீர்கள் என்றேன் இப்ப பாருங்க அதைச் சாப்பிட வருவாங்க உங்களுக்கே புரியும் என்றார். சற்று நேரத்தில் அணில்கள் ஓடோடி வந்து உணவுகளை சாப்பிட்டது.பிறகு மற்றொரு இடத்தில் உணவுகளை வீசினார் பறவைகள் வந்து சாப்பிட்டது. மண்ணில் பொந்துகள் உள்ள இடத்தில் உணவுகளை வைத்தார் பெருக்கான் வந்து சாப்பிட்டது  

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது என் வாழ்நாளில் எலி வகை பெருக்கான்களுக்கு உணவு வைப்பதையும் அவைகளும் உடனே வந்து சாப்பிடுவதையும் இப்போது தான் பார்த்தேன். 

மீதம் உள்ள உணவுகளை குரங்குகளுக்கு வைக்கிறார். 
தினமும் ரூ.2000/=க்கு உணவுகள் வாங்குகிறார்.
கலெக்டர் பங்களா, அஸ்தம்பட்டி,புதூர்,செட்டி சாவடி,கொண்டப்பநாய்கன் பட்டி,ஏற்காடு அடிவாரம் என்று சுமார் 20.கிலோமீட்டர் 
தூரம் தன் சேவையை செய்கிறார். 
நான் அவரிடம் தங்களுக்கு வருமானம் ஏது ஐயா என்று கேட்டேன் நாட்டு வைத்தியம் பார்ப்பேன் தினமும் 2000.கிடைக்கும் வண்டிக்கு பெட்ரோல் போட்டது போக மீதம் ஜீவன்களுக்குத்தான் உணவு வாங்கி அளிப்பேன் என்றார். எவ்வளவு காலமாக இதை செய்கிறீர்கள் என்றேன்.
சுமார் 65.வருடங்களாக செய்கிறேன் என்றார்.

உங்களுக்கு என்ன நன்மை இதனால் என்று கேட்டேன் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்து நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு நீ பதில் சொல் என்றார். 
இந்த 65.ஆண்டுகாலமாக நான் செய்யும் இந்தப் பணியில்,ஒரு நாள் கூட எனக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டதில்லை,எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை தொடர் மழை பொழிந்தாலும் 
எனக்கு தடை ஏற்பட்டதில்லை 
தர்மம் செய்ய எல்லோராலும் 
முடியாது இதெல்லாம் பிறவி பயன் பிராப்தம் வேணும் தம்பி என்று முடித்தார்.!

65.ஆண்டு சேவை...???
தடை ஏதுமில்லை...???
100.பதில் மனதில் ஓடின.!!
இவரை சந்தித்தது மிகவும் பெருமையென மகிழ்கிறேன் 
உறவுகளே...
சேலம் பகுதி உறவுகளே...
இவரைக் கண்டால் ஐந்துநிமிடம் பேசி,ஒரு வாழ்த்து கூறி. 
ஆசி பெற்று   செல்லுங்கள். 
வாசித்த நெஞ்சங்களுக்கு 
வணக்கம்.! 

கண்ணால் கண்டதை காணிக்கை யிக்கியுள்ளேன்.  
விரைவில் அந்த அற்புத மனிதருடன் ஒரு நாள் பயணிக்க உள்ளேன்.🙏🙏🙏

கம்பு செய்யும் உதவி

Thursday, 4 October 2018

21 oct 2018 சன்மார்க்க அன்பர் ஹரிஹரன் திருமணம் முன்னிட்டு பசி ஆற்றுவித்தல்

சன்மார்க்க அன்பர் ஹரிஹரன் திருமணம் முன்னிட்டு   தொடர்ந்து மாதந்தோறும் பூச தினத்தன்று  அன்னதானம் செய்தார். வள்ளலார் அருளோடு வருகின்ற 21 Oct 2018 திருத்தணி முருகன் சந்நிதியில் திருமணம் நடைப்பெற உள்ளது. மணமக்கள் நீடூழி திருவருளோடு வாழ பிரார்த்தனை செய்வோம்.

மனித தேகத்தின் சிறப்பு - திரு அருட்பிரகாச வள்ளலார்

6/Nov/2024 - பசிஆற்றல் - Th.Venkateshwaran Family  (நல்ல தேக ஆரோக்கியத்தோடு இன்புற்று வாழ வேண்டி)